தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்த அறிஞர் அண்ணாவின் உரை

#50YearsOfTamilNadu
மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று நம் மாநிலப் பெயராக மாற்றிய பொன்விழா ஆண்டு இது. தமிழ்நாட்டு வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல். இந்தியா என்ற பல்வேறு நாடுகளின், கலாச்சாரத்தின், மொழிகளின் கூட்டமைப்பில்…மாநில உரிமைகள், மொழி உரிமை, பண்பாட்டு உரிமைகள் என தனித்த அடையாளத்தையும், அரசியலையும் உரத்து பேசிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் இதில் வழிகாட்டி. ஏன் “தமிழ்நாடு” என்ற பெயர்? நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாடா? என்ற கேள்வியை தமிழர்கள் என்ற பெயரிலேயே புல்லுருவிகள் கேட்டார்கள் பேரறிஞர் அண்ணாவிடம்… நீங்கள் லோக்சபா, ராஜ்யசபா, ராஷ்டிரபதி என்றெல்லாம் இந்திய நாட்டை குறிப்பிடும் போது நாங்கள் எங்கள் நாட்டை தமிழ்நாடு என்று ஏன் கூற முடியாது என்று சாதுரியமாக பதிலடி கொடுத்தார் அண்ணா. தமிழ்நாடு என்பது சங்க காலத்து சொல்லாடல்.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்பது தொல்காப்பிய பாடல்.

வரலாற்றின் முக்கியமான மைல்கல் இது என்பதோடு, வருங்காலத்தை உரக்கச் சொல்லும் ஒரு முக்கிய நிகழ்வு இது.

அதை கொண்டாடும் வகையில் #50YearsOfTamilNadu என்று டிவிட்டர், பேஸ்புக்கில்.. தமிழ் புத்தாண்டு நாளான பொங்கல் திருநாளில் பதிவுகளை இட்டு தேசிய அளவில் அதை டிரெண்ட் செய்வோம். நன்றி!!

இந்த காணொளியில் தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்த அறிஞர் அண்ணாவின் அற்புதமான பேச்சை கேட்கலாம்!

மூலம் – https://www.facebook.com/rajarajan.rajamahendiran/videos/10211784973694419/