அறிஞர் அண்ணாவை தெரியுமா தம்பி? – ஆழி செந்தில்நாதன்


தன்னாட்சி தமிழகம் சார்பில் மதுரையில் 16.9.2018 அன்று அண்ணாவை தெரியுமா தம்பி எனும் ஆய்வரங்கம் நடைபெற்றது இதில் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் பங்கு எத்தகையது அவரின் இடைவிடாத திராவிட நாடு கோரிக்கையின் தீவிரம் எங்கனம் இருந்ததது அதனை சுதந்திரத்திற்கு பிறகும் இந்தியா அதனை முறியடிக்க என்ன வகையான சூழ்ச்சிகளை செய்தன குறைந்தபட்ச சமரசத்தில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற நிலைப்பாட்டுக்கு காரணம் என ஒரு பெரும் வரலாற்றை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் தோழர் ஆழி செந்தில்நாதன் அவர்கள்.

தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்த அறிஞர் அண்ணாவின் உரை

#50YearsOfTamilNadu
மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று நம் மாநிலப் பெயராக மாற்றிய பொன்விழா ஆண்டு இது. தமிழ்நாட்டு வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல். இந்தியா என்ற பல்வேறு நாடுகளின், கலாச்சாரத்தின், மொழிகளின் கூட்டமைப்பில்…மாநில உரிமைகள், மொழி உரிமை, பண்பாட்டு உரிமைகள் என தனித்த அடையாளத்தையும், அரசியலையும் உரத்து பேசிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் இதில் வழிகாட்டி. ஏன் “தமிழ்நாடு” என்ற பெயர்? நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாடா? என்ற கேள்வியை தமிழர்கள் என்ற பெயரிலேயே புல்லுருவிகள் கேட்டார்கள் பேரறிஞர் அண்ணாவிடம்… நீங்கள் லோக்சபா, ராஜ்யசபா, ராஷ்டிரபதி என்றெல்லாம் இந்திய நாட்டை குறிப்பிடும் போது நாங்கள் எங்கள் நாட்டை தமிழ்நாடு என்று ஏன் கூற முடியாது என்று சாதுரியமாக பதிலடி கொடுத்தார் அண்ணா. தமிழ்நாடு என்பது சங்க காலத்து சொல்லாடல்.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்பது தொல்காப்பிய பாடல்.

வரலாற்றின் முக்கியமான மைல்கல் இது என்பதோடு, வருங்காலத்தை உரக்கச் சொல்லும் ஒரு முக்கிய நிகழ்வு இது.

அதை கொண்டாடும் வகையில் #50YearsOfTamilNadu என்று டிவிட்டர், பேஸ்புக்கில்.. தமிழ் புத்தாண்டு நாளான பொங்கல் திருநாளில் பதிவுகளை இட்டு தேசிய அளவில் அதை டிரெண்ட் செய்வோம். நன்றி!!

இந்த காணொளியில் தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்த அறிஞர் அண்ணாவின் அற்புதமான பேச்சை கேட்கலாம்!

மூலம் – https://www.facebook.com/rajarajan.rajamahendiran/videos/10211784973694419/

இட ஒதுக்கீடு எனும் இடவுரிமை – ஆழி செந்தில்நாதன் உரை

தோழன் இயக்கம் ஒருங்கிணைத்த ‘களம்’

இடஒதுக்கீடு எனும் இடவுரிமை – கருத்தரங்கிங் ஆழி செந்தில்நாதன் ஆற்றிய உரை.

தொடர்பு – zsenthil@gmail.com

ஒலியோடை வெளியீடு – கணியம் அறக்கட்டளை

kaniyamfoundation@gmail.com

kaniyam.com/foundation

ஆழி செந்தில்நாதன் தமிழகத்தின் உரிமைகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக செயல்பட்டுவருபவர். மொழியுரிமைக்களத்தில் முன்னிலையில் நிற்பவர். தன்னாட்சித் தமிழகம், Campaign for Language Equality and Rights போன்ற அமைப்புகளில் முக்கியப் பங்கெடுத்திருக்கும் இவர் ஆழி பதிப்பகம் என்கிற நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.