அறிஞர் அண்ணாவை தெரியுமா தம்பி? – ஆழி செந்தில்நாதன்


தன்னாட்சி தமிழகம் சார்பில் மதுரையில் 16.9.2018 அன்று அண்ணாவை தெரியுமா தம்பி எனும் ஆய்வரங்கம் நடைபெற்றது இதில் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் பங்கு எத்தகையது அவரின் இடைவிடாத திராவிட நாடு கோரிக்கையின் தீவிரம் எங்கனம் இருந்ததது அதனை சுதந்திரத்திற்கு பிறகும் இந்தியா அதனை முறியடிக்க என்ன வகையான சூழ்ச்சிகளை செய்தன குறைந்தபட்ச சமரசத்தில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற நிலைப்பாட்டுக்கு காரணம் என ஒரு பெரும் வரலாற்றை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் தோழர் ஆழி செந்தில்நாதன் அவர்கள்.

மதவெறி மற்ற மதங்களை இழிவாக நோக்குகிறது – பேரா.அருணன்


“மதவெறி தான் சார்ந்திருக்கிற மதத்தைத் தவிர மற்ற மதங்களை இழிவாக நோக்குகிறது” என “வகுப்புவாத அபாயம்” என்ற தலைப்பில் பேரா.அருணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் (TNTA) சங்கத்தின் 8வது மாநில மாநாட்டு கருத்தரங்கத்தில் பேசினார்.

அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம்.. : எஸ். ராமகிருஷ்ணன்


நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை.

மே தினம்: இந்திய இளைஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும்-ஏ.கே.பத்மனாபன்


இந்தியாவில் உள்நாட்டு, பன்னாட்டு அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் கொடுமை, சுரண்டல் நடைபெறுகிறது என்பதை இளைஞர்கள் ஏற்க வேண்டும். இது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். முதலில் இதை நீங்கள் உணர வேண்டும். அந்த உணர்விலிருந்துதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை, நீங்களாகவே அதை முடிவு செய்து கொள்ள முடியும் என்று மே தினத்தில் இந்திய இளைஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஏ.கே.பத்மனாபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோழர் என்.சங்கரய்யாவின் வாழ்க்கையே செய்தியாக…


96வது வயதில் தோழர் என்.சங்கரய்யா (ஜூலை 15, 2017) இன்று அடி எடுத்து வைக்கிறார். TNCPIM அவரை வாழ்த்துகிறது.

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் | Bhagat Singh


தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936ல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் நகல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் சுருக்கமே இந்த ஆடியோ.

சிகப்பு, கருப்பு, நீலம் வெறும் வண்ணமல்ல! – தோழர் மதுக்கூர் இராமலிங்கம்


சிகப்பு, கருப்பு, நீலம் வெறும் வண்ணமல்ல! – தோழர் மதுக்கூர் இராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்.

இந்திய விவசாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் என்ன?


சமூக விஞ்ஞான கழகம் ஒருங்கிணைத்த “தோழர் அசோக் தவாலே அவர்கள் மகாராஷ்டிரா விவசாயிகள் நெடும்பயணத்தின் அனுபவங்கள்” விளக்கிய நிகழ்ச்சியில் இந்திய விவசாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் அவர்கள் பேசியவை…

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தமிழ் மாநிலம் உருவான தினம் – கே.பாலகிருஷ்ணன்


நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு சென்னை மாகாணம் தமிழ் மாநிலமாக உருவான தினம் இன்று (1 நவம்பர் 1956) – கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)