பெரியார் என்றால் சாதிய எதிர்ப்பாளர், ஆணாதிக்க எதிர்ப்பாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர். அவர்தான் பெரியார் என்று தனக்கே உரிய பாணியில் பெரியாரின் பங்களிப்பை விவரிக்கிறார் பேரா.அருணன்.
இரட்டைத் தியாகிகள் மாரி – மணவாளன் பற்றி தோழர் என்.சங்கரய்யா
1948 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரையிலான கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மதுரையில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தோழர்கள் மாரி மற்றும் மணவாளன் போலீசால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
“ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே
நந்திஷ், சுவாதி “ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே நடந்தப் பட்டிருக்கிறது, என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து CPIM மாநாடு – உ.வாசுகி
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு, ஜூலை 3 சேலத்தில் நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்… வன்முறையற்ற பொது வெளியை உருவாக்க…
தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்த அறிஞர் அண்ணாவின் உரை
#50YearsOfTamilNadu
மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று நம் மாநிலப் பெயராக மாற்றிய பொன்விழா ஆண்டு இது. தமிழ்நாட்டு வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல். இந்தியா என்ற பல்வேறு நாடுகளின், கலாச்சாரத்தின், மொழிகளின் கூட்டமைப்பில்…மாநில உரிமைகள், மொழி உரிமை, பண்பாட்டு உரிமைகள் என தனித்த அடையாளத்தையும், அரசியலையும் உரத்து பேசிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் இதில் வழிகாட்டி. ஏன் “தமிழ்நாடு” என்ற பெயர்? நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாடா? என்ற கேள்வியை தமிழர்கள் என்ற பெயரிலேயே புல்லுருவிகள் கேட்டார்கள் பேரறிஞர் அண்ணாவிடம்… நீங்கள் லோக்சபா, ராஜ்யசபா, ராஷ்டிரபதி என்றெல்லாம் இந்திய நாட்டை குறிப்பிடும் போது நாங்கள் எங்கள் நாட்டை தமிழ்நாடு என்று ஏன் கூற முடியாது என்று சாதுரியமாக பதிலடி கொடுத்தார் அண்ணா. தமிழ்நாடு என்பது சங்க காலத்து சொல்லாடல்.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்பது தொல்காப்பிய பாடல்.
வரலாற்றின் முக்கியமான மைல்கல் இது என்பதோடு, வருங்காலத்தை உரக்கச் சொல்லும் ஒரு முக்கிய நிகழ்வு இது.
அதை கொண்டாடும் வகையில் #50YearsOfTamilNadu என்று டிவிட்டர், பேஸ்புக்கில்.. தமிழ் புத்தாண்டு நாளான பொங்கல் திருநாளில் பதிவுகளை இட்டு தேசிய அளவில் அதை டிரெண்ட் செய்வோம். நன்றி!!
இந்த காணொளியில் தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்த அறிஞர் அண்ணாவின் அற்புதமான பேச்சை கேட்கலாம்!
மூலம் – https://www.facebook.com/rajarajan.rajamahendiran/videos/10211784973694419/
இட ஒதுக்கீடு எனும் இடவுரிமை – ஆழி செந்தில்நாதன் உரை
தோழன் இயக்கம் ஒருங்கிணைத்த ‘களம்’
இடஒதுக்கீடு எனும் இடவுரிமை – கருத்தரங்கிங் ஆழி செந்தில்நாதன் ஆற்றிய உரை.
தொடர்பு – zsenthil@gmail.com
ஒலியோடை வெளியீடு – கணியம் அறக்கட்டளை
kaniyamfoundation@gmail.com

ஆழி செந்தில்நாதன் தமிழகத்தின் உரிமைகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக செயல்பட்டுவருபவர். மொழியுரிமைக்களத்தில் முன்னிலையில் நிற்பவர். தன்னாட்சித் தமிழகம், Campaign for Language Equality and Rights போன்ற அமைப்புகளில் முக்கியப் பங்கெடுத்திருக்கும் இவர் ஆழி பதிப்பகம் என்கிற நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
