இந்தியாவில் உள்நாட்டு, பன்னாட்டு அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் கொடுமை, சுரண்டல் நடைபெறுகிறது என்பதை இளைஞர்கள் ஏற்க வேண்டும். இது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். முதலில் இதை நீங்கள் உணர வேண்டும். அந்த உணர்விலிருந்துதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை, நீங்களாகவே அதை முடிவு செய்து கொள்ள முடியும் என்று மே தினத்தில் இந்திய இளைஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஏ.கே.பத்மனாபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.